ஜன்னல் ஓரம் தலைசாய்ந்து நீ
அழுத போது மழையில் நனைந்த
கம்பிகளும் உன்னோடு சேர்த்து அழுகிறது
முட்டாள் போல் ஓரம் நின்று ரசிக்கும்
என்னை கண்டு திட்டாதவர்கள் இல்லை
உன்னை சுற்றி மொய்க்கும் உன் தோழிகள்
என்னை வில்லன் போல் பார்க்கிறார்கள்
அவர்களுக்கு தெரியுமா???
பல நேரம் என்னால், சில நேரம் எனக்காக
உன் அழுகையும் என் வசம் ஆனது என்று!!!
No comments:
Post a Comment