Thursday, 20 August 2009

நான் பார்த்ததில் சில!!!

தினமும் ஆபீஸில் இருந்து வீட்டுக்கு செல்ல எப்படியும் மீம்படுத்த அரை மணி நான்\நான்\நான் விடும். என் நான் வந்தால் எதாவது பேசி கொண்டே போவோம், நேரம் போவதே தெரியாது. ஒரு வாரம் அவன் வரவில்லை, தனியாக செல்ல வேண்டிய கட்டாயம். நிதானமாக சாலை வழியில் நடக்கும் விசயங்களை பார்த்து கொண்டே சென்றேன்.

அரை மணி நேரத்தில் எவ்வளவு விசயங்கள் நடக்கிறது. பார்கத்தான் முடியவில்லை, எதை சொல்லுவது எப்படி சொல்லுவது. ஒரு குழந்தை (வயது 6 /7 இருக்கும் ) அந்தரத்தில் ஒற்றை கயிற்றில் நடந்து வித்தை காட்டுகிறது. ஒரு பெண்மணி அங்கே கூடி இருப்பவர்களிடம் அந்த குழந்தையை காட்டி பிட்சை இடுத்து கொண்டிருக்கிறாள். எனக்கோ அந்த குழத்தை எங்கே கீழே விழுந்து விடுமோ என்ற பயம். என்ன தவறு செய்தார்கள் இந்த பிஞ்சுகள். புது புது நிரத்தில் புது புது கொடிகள் சாலை எங்கும் பறக்கிறது. ஒவ்வொரு முறையும் கட்சி கூட்டங்கள் நடக்கும் போது குடுத்த வாக்குகள் சலவை செய்வதில்லை, நிறை வெற்றப்படுவதும் இல்லை. கொடிகள் புதிதாக சலவை செய்து பறக்கிறது, வீதிகள் பளிச் என்று மின்னுகிறது. எங்கிருந்து வருகிறது இந்த பணம், எப்படி வருகிறது. கொல்லை அடிக்காத அரசியல்வாதிகளை இன்று விரல் விட்டு எண்ணலாம். நான் சொல்லுவது ஒன்று தான், எடுத்துகொள் இருப்பினும் அதில் ஒரு பங்கு இப்படி கை ஏந்தி நிற்கும் குழந்தைகளுக்கு கொடுத்து உதவுங்கள். பசிக்காக தன்னை வருத்தும் இந்த சின்ன குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்த நாம் கை கோற்போம்.


No comments:

Post a Comment