Wednesday, 8 April 2009

ஆசை

நீ குடி ஏற நான் தான் கிடைத்தேனா
கையளவு இதயத்தில் நீ நடத்தும்
போராட்டத்தை எங்கு போய் முறை இடுவேன்
எங்கிருந்து வருகிறாய் , எப்படி வருகிறாய் என்று
புரியாமல் தவிக்கும் ஆயிரத்தில் நானும் ஒருவன்
காற்றை கூட சுவாசிக்கலாம்
ஆனால் உன்னை முடியவில்லை
நீ என்ன கடவுளா, இறப்பின்றி
வாழ்கிறாய், இறந்தாலும் மீண்டும்
ஜனனம் பெறுகிறாய்
சில நேரம் குழந்தையை போல்
அரவனைகிறாய் சில நேரம்
கொடுமையாக சுடுகிறாய்
ஏற்றதாழ்வின்றி அனைவரையும் பற்றி கொள்கிறாய்
உன்னை புகழ்வதா இல்லை பலிப்பதா புரியவில்லை
உன்னை படைத்த இறைவன் உன்னை
புரிந்து கொள்ளும் சக்தியை தரவில்லை
இருப்பினும் உன்னால் இவ்வுலகம்
இயங்குவது மட்டும் உண்மை!!!

No comments:

Post a Comment